search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் சென்னை பசுமை வழி சாலை"

    8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கிறது என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது மக்களுக்கு உயிர் முக்கியம். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசியிருக்கிறார் பழனிசாமி. இதுதான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம்.

    சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப்போவதில்லை.

    இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23-ந்தேதி தெரிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குஷ்பு கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் சகோதரி குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

    பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும்.

    ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.

    உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர் தான் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா?

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம் என்பதால் ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் தடை வந்துள்ளது.


    8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய மந்திரி பியுஸ்கோயலும் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், பின் நோக்கம் இருப்பதாகவும் யாரும் நினைக்க வேண்டாம்.

    நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.

    பிச்சை எடுப்பவர்கள் பிச்சை போடுபவர்களை தர்ம பத்தினி என கூறுவார்கள். அதுவே அவர்கள் பிச்சை போடாவிட்டால் அவர்களை மூதேவி என்பார்கள்.

    கூட்டணிக்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க. ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    8 வழிச்சாலை திட்டம் வளர்ச்சியை முன்னோக்கியது. ஆகவே தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதில் தவறில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார்.

    கரூர்:

    கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேவேந்திர குல வேளாளர்கள் பற்றி இதுவரை பேசாத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான். அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவேன் என்பதும், விவசாய கடன்களை ரத்து செய்வேன் என்பதும் கேலிக்கூத்தாக உள்ளது.

    ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட திட்டம் ஏற்று கொள்ளும்படியானதாக இருக்கிறது.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் ஒரு சில இடங்களில் நடக்கலாம். அதற்காக நாடு முழுவதும் நடப்பதாக கூற முடியாது. 8 வழிச்சாலை திட்டம் வளர்ச்சியை முன்னோக்கியது. ஆகவே தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதில் தவறில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து பொதுவாக 3 விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad
    சென்னை:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 37 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு தடை விதித்தனர். தமிழக அரசின் அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த திட்டத்துக்காக மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியதும் செல்லாது என்று அறிவித்தனர்.

    மேலும் யாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களுக்கே அந்த நிலத்தை 8 வாரத்துக்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது.

    பொதுவாக 3 விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    முதலில் 8 வழி பசுமை சாலைத்திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற 37 மனுதாரர்களும் சுப்ரீம் கோர்ட்டில் “ஹேவியட்” மனு தாக்கல் செய்யலாம். 8 வழி சாலை திட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதேனும் பிறப்பிப்பதாக இருந்தால் அதற்கு முன்பு தங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று 37 மனுதாரர்களும் கோரிக்கை விடுக்கலாம்.

    இரண்டாவதாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமோ அல்லது மத்திய சாலை போக்குவரத்து துறையோ சென்னை ஐகோர்ட்டின் ரத்து உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பு உள்ளது.

    மூன்றாவதாக இந்த திட்டத்துக்கு மத்திய அரசு உரிய விதிமுறைப்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்று, புதிய அறிவிப்பினை வெளியிட்டு திட்டத்தை தொடங்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. இதை மத்திய அரசு கையில் எடுக்க வாய்ப்பு உள்ளது.

    அதன்படி பொதுமக்களிடம் கருத்து கேட்டு மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க மத்திய அரசு முயற்சி செய்யும். இந்த 3 விதமான நடவடிக்கைகளே அடுத்தகட்ட நடவடிக்கையாக அமையும். #SalemChennaiGreenCorridor #8LaneRoad

    சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நாளை மறுநாள் ஐகோர்ட்டு பிறப்பிக்கிறது. #MadrasHC #ChennaiSalemExpressway
    சென்னை:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, தர்மபுரி எம்.பி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அதாவது இந்த வழக்கை கடந்த 8 மாதங்களாக நீதிபதிகள் விசாரித்தனர்.

    பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த ஜனவரி 4-ந்தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். #MadrasHC #ChennaiSalemExpressway 
    இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்கள் நோக்கம் என்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தினகரன் கூறியுள்ளார். #dinakaran #admkleaf #admk
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர்  டி.டி.வி.தினகரன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீயசக்தியான தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்தது போல், துரோக சக்தியான அ.தி.மு.க.விடம் இருந்து விலகி வந்து விட்டோம். அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினர்.

    ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை போன்ற மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அவர்கள் கொண்டு வரவில்லை. தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் வேடிக்கையாக பேசியுள்ளார். தற்போதுள்ள மத்திய அரசு வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தொழில் துறையை  வளர்ப்பதாக கூறி விவசாயத்தை அழிக்க நினைக்கின்றனர். 

    நாங்கள் துரோக கும்பலை விட்டு ரொம்ப தூரம் தள்ளி வந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #admkleaf #admk
    கோவையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #pmk #mekedatudam #ramadoss

    கோவை:

    கோவையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே. மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

    வன்னியர் சங்க தலைவர் குரு மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது.

    மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும். காவிரி ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்.

    கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு முழு நிவாரண நிதி வழங்க வேண்டும். விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டதை திரும்ப பெற வேண்டும். நெய்வேலி என்.எல்.சியில் 3-வது சுரங்கம் அமைக்க கூடாது.

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் புத்தாண்டில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொங்கு மண்டலத்தில் நலிவடைந்த தொழில்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டியில் செயல்பட்டு வரும் உருளை கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடக் கூடாது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரும் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக அறிவிக்க வேண்டும்.

    சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும். அத்திக்கடவு-அவினாசி உள்ளிட்ட பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


    பொதுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #pmk  #mekedatudam #ramadoss

    சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #Edappaipalaniswami
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: காவிரி பிரச்சனை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையில் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி தற்போது உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மேகதாது பிரச்சனையில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை.


    கே: எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களே?

    பதில்: சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் உள்ளிட்ட யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது தமிழக அரசின் நோக்கம் இல்லை. ஒட்டுமொத்த பொது மக்களின் நலனுக்காகவும் இந்தியாவிலேயே இரண்டாவது பசுமை வழிச்சாலையான 8 வழி சாலை திட்டம் தமிழகத்திற்கு செயல்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழில் வளத்தில் தமிழகம் பெரிய அளவில் வளரும் வாய்ப்புள்ளது. எட்டு வழி சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தென்னை மரம், மா மரத்திற்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNCM #Edappaipalaniswami #greenexpressway
    8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #CentralGovt
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை-சேலம் இடையிலான 277 கி.மீ நீள பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    பசுமைவழிச் சாலைத் திட்டம் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை மத்திய அரசு தனித்தனியாக வெளியிட்டிருக்கிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.28 கி.மீ நீளத்திற்கு 8 வழிச்சாலை அமைப்பதற்கான 39 கிராமங்களைச் சேர்ந்த 1510 பேரிடமிருந்து 1125 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தப் போவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாவட்டங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாகவும் அறிவிக்கை வெளியிட்டுள்ள மத்திய அரசு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அதை 21 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மிகக்கடுமையான போராட்டங்களை சந்தித்தத் திட்டங்களில் 8 வழிச்சாலைத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்பதால், இதைக் கைவிடக் கோரி பா.ம.க. ஏராளமான போராட்டங்களை நடத்தியது.

    பா.ம.க.வைச் சேர்ந்த தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பல உழவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

    அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பசுமைவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் இருந்து அவற்றின் உரிமையாளர்களை வெளியேற்றத் தடை விதித்துள்ளது. அது மட்டுமின்றி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் வரை நிலங்களை கையகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி அளித்திருந்தது.


    உயர்நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறி நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு அவசர, அவசரமாக வெளியிட்டது ஏன்? பசுமைவழிச் சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அத்தகைய சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, உயர்நீதிமன்ற அனுமதி பெற்று அறிவிக்கை வெளியிடுவது தான் சரியானதாக இருக்கும்.

    அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டதில் இருந்தே, ஏதோ சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காக பசுமைவழிச் சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    பசுமைவழிச் சாலைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய வாதமே, சென்னை-சேலம் இடையிலான சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலங்களை அளவீடு செய்யக் கூடாது என்பது தான். அதுமட்டுமின்றி, எந்தவொரு உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும் சுற்றுச்சுழல் அனுமதி பெறாமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

    சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட எந்தவிதமான நிலம் எடுப்பு பணிகளையும் அரசு மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தெளிவாகக் கூறியுள்ள நிலையில், சட்ட விரோதமாக செய்யப்பட்ட நில அளவீட்டின் அடிப்படையில் நிலங்களைக் கையகப்படுத்துவது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும். இது நீதிமன்றங்களை அவமதிக்கும் செயலாக அமையாதா?

    இவற்றுக்கெல்லாம் மேலாக, சென்னை-சேலம் சாலைக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களில் இருந்து அவற்றின் உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு காரணமே, நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளால் மக்களிடம் நிலவிய அச்சத்தையும், பதற்றத்தையும் போக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ள நில எடுப்பு அறிவிக்கையால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடையே மீண்டும் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

    இதை உணர்ந்து நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிக்கைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். அது மட்டும் தான் மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss #CentralGovt
    அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கருத்து கேட்க தேவையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #LandAcquisition #MadrasHC
    சென்னை:

    சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவை நீக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் உள்ள பிரிவு 105-ன்படி, தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும்போது சமூக பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளதாகவும், இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, நில உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். அதன் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்த கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவு செல்லும் என்று கூறிய நீதிபதிகள், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் மனுவை தள்ளுபடி செய்தனர். #LandAcquisition #MadrasHC
    தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுக்காவிட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #tngovt #chennaisalem8waygreenroad

    சேலம்:

    சேலத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையே 8 வழி சாலை தேவை இல்லாத ஒன்று. சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஆனால் 4-வது தேசிய நெடுஞ்சாலை தேவையில்லை. 2 ரெயில் பாதை, விமான போக்குவரத்து உள்ளது. அதனால் 8 வழி சாலை திட்டம் தேவையில்லாத ஒன்று. 8 வழி சாலையை எதிர்த்து நான் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தேன். எனது வக்கீல் ராஜா என்பவர் வாதாடினார். நானும் அங்கு சென்றேன். அப்போது அன்புமணி எம்.பி அவர்கள் இந்த 8 வழி சாலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த மன வேதைனையும், மன அழுத்தத்தில் இருப்பதாக கூறினர்.

    இதை கேட்ட நீதிபதிகள் சம்பந்தபட்ட அரசின் அட்வகேட் ஜெனரலிடம் கேட்டனர். நாங்கள் பொதுமக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கூறினர். இதைகேட்ட நீதிபதிகள் இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    ஆனால் எங்கள் நோக்கம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான். இதை சட்ட ரீதியாக தான் நாங்கள் அனுகியுள்ளோம் தேவைப்பட்டால் அரசியல் ரீதியாக குதிப்போம். எனவே 8 வழி சாலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளில் ஒவ்வொறு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை அமைத்து 50 டி.எம்.சி நீரை தேக்கலாம். வருங்காலத்தில் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும். ஆனால் சேலம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஆனால் கடந்த 6 வாரமாக மேட்டூர் 155 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. மேட்டூர் உபரி திட்டம் தொடங்க கோரி 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெற 50 டி.எம்.சி தண்ணீர் உபரி நீரே போதுமானது. மேச்சேரி, ஆத்தூர் தலைவாசல், வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு, ஆகிய பகுதிகளை இணைத்து மேட்டூர்-சேலம் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்திற்கு நிறைவேற்றதற்காக ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்படும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றவில்லை. சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் நிறைவேற்ற முடியும்.


    கே- கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து உங்கள் கருத்து

    பதில்- கருணாநிதி தி.மு.க-வுக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழகத்திற்கும் தலைவர் அவர். இந்தியாவிற்கே வழி காட்டியாக இருந்தவர். அவரின் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அதை அரசியலாக பார்க்க கூடாது.

    கே- முதல் அமைச்சர் மீது ஊழல் புகார் தி.மு.க கொடுத்துள்ளது.

    பதில்- பொதுப்பணித் துறையில் 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார். அப்போது 5 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. அது மட்டும் அல்ல தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதை ஊழல் என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுக உள்ளோம்.

    69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. இதனால் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால். தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும். இதனால் ஒட்டு மொத்த தமிழக மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றார். 

    இவ்வாறு அவர் கூறினார்.  #anbumani #tngovt #chennaisalem8waygreenroad

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். #GreenwayExpress #Thirumavalavan
    சென்னை:

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் யாவும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட நிலம் கையகப்படுத்தும் பணியை செய்து வந்தது. அதற்கு இப்போது சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.

    தமிழக அரசு இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது போல் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenwayExpress #Thirumavalavan
    ×